விஜய் சார்.. நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள், அதனால் இதை கண்டிப்பாக செய்யுங்கள்: இயக்குனர் பேரரசு..

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

தளபதி விஜய் சார் அவர்களே, நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார் என்பதும் அதன் பிறகு அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் தெளிவாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் ’விஜய் சார்! உங்கள் கட்சி இந்த தேர்தலில் நிற்கவில்லை, இருந்தாலும் உங்கள் ரசிகர்கள் ஓட்டு போடுவது ஜனநாயக உரிமை! ஒன்று உங்களுக்கு நம்பிக்கையான கட்சிக்கு ஓட்டளிக்க சொல்லுங்கள் இல்லையென்றால் ஓட்டுக்கு பணம் வாங்காமல் அவர்கள் விரும்பிய கட்சிக்கு ஓட்டளிக்க சொல்லி அறிக்கை விடுங்கள்’ என்று கூறியிருந்தார்.

பேரரசுவின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்சி தலைவர் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று எப்படி தன்னுடைய தொண்டர்களிடம் கூறுவார்? அது அவரது கட்சிக்கு பின்னால் பிரச்சனை தராதா? விஜய் ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்வார்கள், விஜய் இந்த விஷயத்தில் தலையிட அவசியம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர் இயக்குனர் பேரரசுக்கு ஆதரவாகவும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.