'அண்ணாத்த' திரைப்படத்தை திருப்பாச்சி'யுடன் ஒப்பீடு குறித்து பேரரசு பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு ஒரு சிலர் ஓவர் டைம் பார்த்து நெகட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக சமூக வலைதளங்களில், யூடியூப்களில் இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இந்த படத்தை கிண்டல் செய்து மீம்ஸ்களும் பலர் வெளியிட்டு வருகின்றனர் என்பதும் அவற்றில் ஒன்று ’அண்ணாத்த’ திரைப்படம் விஜய் நடிப்பில் பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் கதை போன்று உள்ளதாகவும் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘திருப்பாச்சி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பேரரசு அவர்கள் இதற்கு பதில் கூறியுள்ளார். திரைப்படத்தில் நிறை குறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத் துரோக ரேஞ்சுக்கு வன்மத்துடன் நாகரீகமற்று சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூடியூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது/ இருந்தும் ’அண்ணாத்த’ வெற்றிபெற்று அண்ணாந்து பார்க்க வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பேரரசுவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு
— PERARASU ARASU (@ARASUPERARASU) November 6, 2021
வன்மத்தோடும்,வக்கிரத்தோடும்,நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது
வேதனையாக இருக்கிறது!
சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது!
இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்! pic.twitter.com/1Tne5lPwwS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com