கோடி கோடியாய் நிதி கொடுப்பதற்கு பதில் இதை செய்யலாம்: உச்ச நடிகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள உச்ச நடிகர்கள் கோடிகோடியாய் கொரோனா நிவாரண நிதி அளிப்பதற்கு பதிலாக இதைச் செய்யலாம் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு கோடிக்கணக்கில் நிதி உதவி செய்வதற்கு பதிலாக உச்ச நடிகர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டால் அது பலரையும் சென்று சேரும் என்றும் அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில்
உச்சத்தில் உள்ள சில நடிகர்களின்
சின்ன அசைவுக்குகூட இங்கே
பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
அவர்களின் ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லப்படுகிறது.
அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக்கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில்
உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும்,
மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச்சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும்!
எத்தனை கோடி நிதி கொடுத்தாலும்,
அதைவிட இது பயனுள்ளதாக அமையும். நன்றி
வாழ்வோம்!
வாழ வைப்போம்!
பேரரசுவின் வேண்டுகோளை தமிழ் திரையுலக உச்சநடிகர்கள் ஏற்றுக்கொண்டு வீடியோவை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments