பாஜகவில் இணைந்த அஜித்-விஜய் பட இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில மாதங்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் இணைந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகர் ராதாரவி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்பட பலர் அக்கட்சியில் இணைந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் நடித்த ’திருப்பதி’, விஜய் நடித்த ’சிவகாசி’ ’திருப்பாச்சி’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு திடீரென என்று பாஜகவின் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு பாஜகவின் உறுப்பினர் அட்டையை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து பாஜகவில் இணைந்த மற்றொரு நட்சத்திர பட்டியலில் பேரரசு இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திரங்களின் இணைப்பால் பாஜக தமிழகத்தில் வலிமை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இன்னும் அணையாத காட்டுத்தீ.. ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை..!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் வெற்று வார்த்தைகள்.. செயல்படுத்தும் விதமாக ஒரு திட்டம் கூட இல்லை..! பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி.

நிதியமைச்சரின் இந்த உரை முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை: பெரும் பரபரப்பு

காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான சொந்த மகள் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை, தனிநபர் வருமான வரிச்சலுகை: பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை முதல் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் படித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனிநபர் வருமான வரிச்சலுகை