இனி விஜய் 'தளபதி' இல்லை, 'தானதளபதி': பிரபல இயக்குனர்
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பு நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் விஜய் இதுவரை எந்த நிதியுதவியும் செய்யவில்லை என நேற்று முன் தினம் வரை நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் இந்த நிதியுதவி குறித்து விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் விஜய் இனி ‘தானதளபதி’ என்று அழைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே,
மனிதர்களின் பெருங்குறை!
தளபதி தானத்தளபதி என்று
மீண்டும் நிரூபித்து விட்டார்.
திராவிடத்தை நேசிக்கும்
தமிழனாய் தளபதி மிளிர்கிறார்!
தளபதி விஜய்க்கு
தலைவணங்கி நன்றிகள் கோடி!
என்று இயக்குனர் பேரரசு கூறியுள்ளார். பேரரசுவின் இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது