கொரோனா தடுப்பூசி போட்டதால் பிரபல இயக்குனருக்கு ஏற்பட்ட அலர்ஜி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பதும் கடந்த 1ஆம் தேதியிலிருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த தடுப்பூசியால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்.
இந்த அலர்ஜி காரணமாக நடிகர் பார்த்திபன் நேற்று வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கமும் நன்றியும்!ஜனநாயக கடமையை சீராக செய்த
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 7, 2021
சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்...
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments