மாஸ் மசாலா படம்: 'எதற்கும் துணிந்தவன்' படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ்

  • IndiaGlitz, [Wednesday,January 26 2022]

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மாஸ் மசாலா படமாக உருவாகி உள்ளதாகவும் இதுவரை தன்னுடைய படத்தில் இல்லாத ஹீரோயிசம் இந்த படத்தில் சூர்யாவுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் பாண்டியராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிய ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை பொறுத்து ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் பாண்டிராஜ் கூறியபோது, ‘எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மாஸ் மசாலா பிரியர்களை திருப்தி அடைய வைக்கும் படமாக இருக்கும் என்றும், தன்னுடைய அனைத்து படங்களிலும் இல்லாத ஹீரோயிசம் இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டருக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே தனது மற்ற படங்களிலிருந்து இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இந்த படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு ’யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.