இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.. விஜயகாந்த் குடும்பத்திற்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் இன்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்து கொண்ட நிலையில் அவரால் நிமிர்ந்து உட்கார கூட முடியாமல் அவ்வப்போது சரிந்து கொண்டிருந்தார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா தான் அவரை அவ்வப்போது நிமிர்ந்து உட்கார வைத்தார். இந்த நிலையில் இதை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர் ’கேப்டனை எப்படி கஷ்டப்படுத்தாதீர்கள்’ என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அரசியல் சினிமா இரண்டிலிருந்தும் விலகி முழு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனை காரணமாக அவர் மீண்டு வந்தார். இந்த நிலையில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் இன்று அவர் கலந்து கொண்டார். வீல்சேரில் வந்து கலந்து கொண்ட அவரால் நிமிர்ந்து கூட உட்கார முடியாத நிலை இருந்தது . இதை பார்த்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ், தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு
கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு ,
— Pandiraj (@pandiraj_dir) December 14, 2023
இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை
அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...🙏
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘
இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு 😭🙏 https://t.co/roZTHx7btB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout