'சூரரைப் போற்று': திரையுலக பிரபலத்தின் முதல் விமர்சனம்!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

சூர்யாவின் ’சூரரைப் போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவே ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்க்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலர் ஏற்கனவே அந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ’சூரரைப் போற்று’படத்தை பார்த்த பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

’சூரரைப் போற்று’ படத்தை பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கேரக்டரும் இதயத்தை தொடும் வகையில் இருந்தது. சூர்யா மிக அபாரமாக நடித்து உள்ளார். சுதா கொங்கரா அவர்களின் கடுமையான உழைப்பை நான் இந்தப் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் பார்த்தேன். ஜீவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த தீபாவளிக்கு ஒரு சரியான விஷுவல் ட்ரீட் தான் இந்த வரைபடம். ’சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்

சூர்யாவின் ’சூரரைப் போற்று’படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது

More News

குக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்!!!

கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

சோம் - ரம்யா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா: ஜோடியை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்தின் டிரைலராக இருந்து வரும் புரமோஷன்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காத்திருக்கின்றனர் என்பதும்

கோரிக்கை மனுவை ஏற்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் அரசாங்க வேலை… தமிழக முதல்வரின் அதிரடி!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கடந்த 2018 ஜுன் மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்

பள்ளிகள் திறப்பது எப்போது? மதுரை உயர்நீதிமன்ற கி்ளை கருத்து!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பாடல் பாடி நடராஜனை வாழ்த்திய வாஷிங்டன் சுந்தர்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றாலும் ஐபிஎல் போட்டியின் ஹீரோவாக அனைவராலும் கருதப்பட்டவர் யார்க்கர் மன்னன் நடராஜன் தான் என்பது அனைவரும் அறிந்ததே.