பெப்சி அமைப்புக்கு இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த தொகை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்தக் காரணத்தால் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை அடுத்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டைகளாகவும் உதவி செய்துள்ளனர். இந்த உதவி காரணமாக தற்போது பெப்சி தொழிலாளர்கள் பசியின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது பங்காக பெப்சி அமைப்பிற்கு ரூ.2 லட்சம் அளித்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் ஊரடங்கு முடிய 13 நாட்கள் இருப்பதால் மேலும் சில கோலிவுட் பிரபலங்கள் நிதியுதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

அதர்வா வெளியிட்ட தளபதி விஜய்யின் வெளிவராத புகைப்படம்!

தளபதி விஜய் மற்றும் நடிகர் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஆகிய இருவரும் சமீபத்தில் உறவினர் ஆனார்கள் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யின் உறவினரும் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு.

கொரோனாவால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 3 வரை ஊரடங்கில் தளர்வு இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனாவால் இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் இன்று முதல் ஒருசில துறைகளுக்கு

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வௌவால்கள்!!! இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன???

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய வைராலஜி ஆராய்ச்சிக் கழகம் இரண்டும் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழ்கின்ற 25 வகையான வௌவால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன.

கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது

கொரோனா தொற்றால் உயிரிழந்த சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது கண்மூடித்தனமான தாக்குதலால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின்