சூர்யாவுக்கு துணை நிற்போம்: ரஜினி பட இயக்குனரின் டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த பேச்சுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் நேற்று கமல்ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக கருத்துக்களை தெரிவித்து வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் தற்போது சூர்யாவின் கல்விக்கொள்கை கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ரஞ்சித் தனது டுவீட்டில் கூறியதாவது:

புதியகல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள் , மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்! ' என்று கூறியுள்ளார்.