பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்: திமுக அமைச்சர் குறித்து பா ரஞ்சித்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் நேற்று அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்
இதற்கு முக்கிய காரணமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரி ஒருவரை ஜாதியை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்! என்று பா ரஞ்சித் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments