பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித் என்பதும் இவர் சமீபத்தில் இயக்கி வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் தற்போது இவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் படங்களை இயக்குவது மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு சில திரைப்படங்களை இவர் தயாரித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் நீலம் புரோடக்சன் தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ’குதிரைவால்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரும் மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மனோஜ் லியோன் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையில், கிரிதரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரஞ்சித்தின் வெற்றி பட பட்டியலில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Extremely happy to announce that our #Kuthiraivaal is all set to release in theatres, on March 4th. Experience the wild ride in theatres near you! @kuthiraivaal @officialneelam @YaazhiFilms_ @vigsun @KalaiActor @AnjaliPOfficial pic.twitter.com/Kxj19FeCU2
— pa.ranjith (@beemji) February 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments