துணிச்சலான தயாரிப்பு: 'கைதி' படத்திற்கு பிரபல இயக்குனர் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ’கைதி’. விஜய் நடித்த ’பிகில்’ என்ற பிரம்மாண்டமான படத்துடன் வெளிவந்த இந்த சின்ன பட்ஜெட் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவரப்பட்ட படமக இருந்ததால், இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, முதல் வாரத்தை விட இரண்டு மடங்கு இரண்டாவது வாரம் வசூல் செய்ததாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், சமூக வலைதள பயனாளர்கள் உள்பட அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துவிட்டாரக்ள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் தனது சமூக வலைத்தளம் மூலம் ’கைதி’ திரைப்படத்தில் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படம் குறித்து கூறியிருப்பதாவது:
’கைதி’ சுவாரசியமான எழுத்து & அற்புதமான திரையாக்கம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மிக இயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கார்த்தி, நேர்த்தியான ஒளிப்பதிவு சத்யா சூரியன், துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு அனைவருக்கும் வாழ்த்துகள்!’ என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் பாராட்டுதலுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
#Kaidhi சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம்@Dir_Lokesh மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய@Karthi_Offl நேர்த்தியான ஒளிப்பதிவு @sathyaDP துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த @prabhu_sr அனைவருக்கும் வாழ்த்துகள்!
— pa.ranjith (@beemji) November 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com