ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் பி வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ’சந்திரமுகி’ திரைப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடியது. ஒரே தியேட்டரில் சுமார் மூன்று வருடங்கள் ஓடிய ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான இந்த படத்தின் மாபெரும் வெற்றி கோலிவுட் திரை உலகையே அதிர வைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் ஒன்றை இயக்குநர் பி வாசு அவர்கள் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும் இந்த படத்தை ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த படத்தின் வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் அவர் 'சந்திரமுகி2’ படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’சந்திரமுகி 2’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வில்லை என்றால் அந்த முன்னணி நடிகர் யார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

முன்னதாக ’தர்பார்’ படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களை வைத்து ஒரு கதையை உருவாக்க இயக்குனர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் அந்த திட்டத்தை ஒரு சில காரணங்களால் அவர் கைவிட்டதாகவும் கூறப்பட்டது.
 

More News

மீண்டும் இணையும் 'நம்ம வீட்டு பிள்ளை' டீம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இந்த வருடம் உலக கோப்பை இந்தியாவுக்கு தான்..! சொன்னது யார் தெரியுமா?!

இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் உள்ளதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

பெண் டாக்டர் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்: அதிர்ச்சி தகவல்

30 வயது பெண் டாக்டர் ஒருவர் உடை மாற்றுவதை ரகசியமாக தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நித்யானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

சூர்யாவின் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்!

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக