அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகும் தமிழர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்பவர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். அமெரிக்க அரசியலில் ஜனநயாகக் கட்சி, குடியரசு கட்சிக்கு இடையே கடுமையான நெருக்கடி நிலவி வருகிறது. இத்தகைய நிலையிலும் சேதுராமனுக்கு இரண்டு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற தேர்தலில் சேதுராமன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறார்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். இவரக்கு 58 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் தேசிய அறிவியல் கழகம் என்பது 7.4 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யும் மிகப்பெரிய பொறுப்புடையதாக இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதை குறித்து அங்கு வாழும் இந்தியர்கள் பெருமை தெரிவித்து வருகின்றனர். அதோடு இருநாட்டு நல்லுறவுகளிலும் நட்பு உணர்வு மேலோங்கும் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது 15 ஆவது முறையாக அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகப்பதவிக்கு இவர் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இதற்கு முன்பாக 2010 – 2013 ஆம் ஆண்டில் பதவி வகித்த சுரேஷ் என்பவரும் ஒரு இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேதுராமன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பௌதீகத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்தவர். 1986 இல் ஐஐடி யில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்க், 1989 இல் ஒட்டவா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரக்கல் மற்றும் இன்ஜினியரிங்க் துறையில் முனைவர் பட்டத்தை (பி.ஹெச்டி) முடித்து இருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அதிலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருப்பதும் பெருமைக்குரிய விஷயமாக அனைவரது மத்தியிலும் பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments