கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்'.. சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிளடி பெக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த படம் வரும் தீபாவளி அன்று, அதாவது அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் பணிகளை தொடங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், இயக்குநர் நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘பிளடி பெக்கர்' படத்தின் வீடியோ அக்டோபர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த மாதம் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், தற்போது புரமோஷன் வீடியோ வெளியாக இருப்பதை கவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படம், கவினின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சூர்யாவின் முதல் பாலிவுட் திரைப்படம்.. உறுதி செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்..!

நடிகர் சூர்யா தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை பிரபல பாலிவுட் இயக்குனர் சமீபத்தில்

நீங்கள் மேம்பட்ட மனிதராக மாற வேண்டுமா? அஜித் சொன்ன பழமொழி: வீடியோ வைரல்..!

ஒரு மனிதன் மேம்பட்ட மனிதராக வேண்டுமென்றால், பயணம் செய்ய வேண்டும் என்று அஜித் கூறிய வீடியோ, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார்

'தளபதி 69' படத்தில் 'டாப் குக்கு டூப் குக்கு பிரபலம்.. கனவு நனவானதாக நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 69' படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் 'குக் வித் கோமாளி மற்றும்

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் ஓட்டு.. டிரம்ப் இடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு தான் எங்களது ஓட்டு என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப்  சமூக வலைதளத்தில் கமெண்ட்களாக மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள்