முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்தில் பிடிப்பாரா? 'பீஸ்ட் 2' குறித்து நெல்சன்

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடித்து இருந்தாலும் நடுநிலை ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை. மேலும் சினிமா விமர்சகர்களும் யூடியூப் விமர்சகர்களும் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கதையே அதுபோன்றுதான் உருவாக்கப்பட்டதாகவும் விஜய் சம்மதம் தெரிவித்தால், காலம் நேரம் கூடினால் ‘பீஸ்ட்' திரைப்படம் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நெல்சன் படம் என்றாலே படம் முழுவதும் காமெடியாக இருக்கும் என்பதை அவருடைய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் நிரூபித்த நிலையில் ‘பீஸ்ட் முதல் பாகத்தில் தனது பாணியை மிஸ் செய்த நெல்சன், இரண்டாம் பாகத்தில் அதை சரி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.