'பீஸ்ட்' படம் குறித்து இயக்குனர் நெல்சனின் மாஸ் அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய் உள்பட படக்குழுவினர்களின் பேட்டி சன் டிவியில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் ’நாளை’ என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை 'பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

More News

போட்டியாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொண்ட 'பீஸ்ட்' - கே.ஜி.எப் 2' இயக்குனர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியும், யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2'  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி

ஜிவி பிரகாஷின் 'செல்பி' படம் குறித்து 'எச்சரிக்கை' விடுத்த இயக்குனர் தங்கர்பச்சான்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செல்பி' திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து

'செல்பி'யை அடுத்து ஏப்ரலில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'ஜெயில்' மற்றும் 'பேச்சிலர்' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் ரிலீசானது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன்

சொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி': யாஷிகாவின் வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அதில் 'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்று கேப்ஷன் பதிவு செய்து உள்ளார்.