'சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் விவகாரம்: விஜய்க்கு ஆதரவு அளித்த இயக்குனர்
- IndiaGlitz, [Sunday,July 08 2018]
கோலிவுட் திரையுலகில் உருவாகும் 90% படங்களில் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன. ஆனால் ஒருசில படங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரஜினி, விஜய் படங்கள் இவ்விதமான எதிர்ப்பை சந்தித்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜய்யின் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது இருந்த போஸ்டருக்கு ஒருசில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதுமட்டுமின்றி தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை விஜய்க்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இதனால் இந்த போஸ்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக 'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் கருத்து தெரிவித்துள்ளார். முதலில் பொதுமக்களின் முதிர்ச்சி தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நடிகர் புகை பிடிப்பதை பார்த்து பொதுமக்கள் புகை பிடிக்க, அந்த அளவுக்கு முதிர்ச்சி தன்மை இல்லாமலா மக்கள் இருக்கின்றனர். நடிகர் புகைப்பிடிப்பதை உடனே புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டும் இலக்கு வைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து விஜய் ரசிகர்கள் பதிவு செய்துள்ள ஆவேசமான கருத்துக்கள் குறித்து கூறிய இயக்குனர் நவீன், 'தோழர்களே. தர்கம் என்பது அவசியமான ஒன்று. தர்கம் செய்யா சமூகம் அஃறிணைகளாகவும் அடிமைகளாகவும் மட்டுமே இருக்கும். ஆனால் கண்ணியமான சொற்பிரயோகம் வேண்டும். 'எது' சரி என்பது விவாதம். 'யார்' சரி என்பது வாதம்' என்று கூறியுள்ளார்.
தோழர்களே. தர்கம் என்பது அவசியமான ஒன்று. தர்கம் செய்யா சமூகம் அஃரிணைகளாகவும் அடிமைகளாகவும் மட்டுமே இருக்கும். ஆனால் கண்ணியமான சொற் பிரயோகம் வேண்டும். 'எது' சரி என்பது விவாதம். 'யார்' சரி என்பது வாதம். Let’s debate, not argue. Don’t abuse. We already hav lot of fools for that
— Naveen.M (@NaveenFilmmaker) July 6, 2018