தமிழ் பொறுக்கி.. மலையாள பொறுக்கி.. இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறும் தவளைகள்: தமிழ் இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ’மஞ்சம்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அவரது விமர்சனத்திற்கு தமிழ் இயக்குனர் ஒருவர் பதிலடி கொடுத்திப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
’மஞ்சம்மெல் பாய்ஸ் படம் குறித்து கருத்து தெரிவித்த எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படம் தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் மலையாள பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை கூட இன்னொரு மொழி தெரியாது, ஆனால் தங்கள் மொழி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் மலையாளிகள் பெரும்பாலும் குடிகாரர்கள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நீண்ட பதிவை தனது வலைதளத்தில் செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் நவீன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலயாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளா சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துளர்!
'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலயாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாகடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துளர்! pic.twitter.com/gRRvk5ihZp
— Naveen Hidhayath (@NaveenFilmmaker) March 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com