சூர்யா மக்கள் பிரதிநிதியாக வேண்டும்: தமிழ் திரைப்பட இயக்குனர் விருப்பம்
- IndiaGlitz, [Tuesday,September 15 2020]
நடிகர் சூர்யா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானது என பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிக்கை ஒருசில நீதிபதிகளின் கண்டனத்திற்கு உள்ளானாலும் பல நீதிபதிகள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ’மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் அறிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் சூர்யா போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதி ஆகவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்’.
இப்படி ஒரு அரசியல் சமூக உளவியல் தெளிவு நிறைந்த ஒரு கருத்தை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த நிதானித்த யோசனைக்குப்பின் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவரே மக்கள் பிரதிநிதியாக நிற்க முடியும்#IStandWithSuriya pic.twitter.com/QHww430tSN
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) September 15, 2020