இவ்வளவு அகந்தை கூடாது: வடிவேலுக்கு இயக்குனர் எச்சரிக்கை
- IndiaGlitz, [Saturday,June 08 2019]
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்புதேவனை ஒருமையில் பேசியதும் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் கடுமையாக விமர்சித்ததும் அவர் மீதான மரியாதையை இழக்க செய்துவிட்டது. இந்த நிலையில் இயக்குனரும், 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்த நவீன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பிரச்சனை குறித்து கூறியிருப்பதாவது.
அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.
நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது. உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் சிம்புதேவன், ஷங்கர் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்
புலிகேசி இடைவேளை காட்சியில் விஎஸ் ராகவன் 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் பிளாப் என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார். '23ஆம் புலிகேசி' படம் நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்.
வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் சிம்புதேவன் அவர்களையும், நான் பெரிதாக மதிக்கும் ஷங்கர் அவர்களையும் பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது.
புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் பவுண்ட் ஸ்கிரிப்ட் படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை. '23ஆம் புலிகேசி 2' எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்
இவ்வாறு இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.
தங்கள் புரிதல் தவறு தோழர். நடிகனின் வேலை ஸ்கிரிப்டில் கரக்ஷன் சொல்வது அல்ல. ஸ்கிரிப்டை தன் நடிப்பின் மூலம் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது. Cinema is a teamwork. யாரும் சஜஷன் சொல்லலாம். ஆனால் இயக்குனரின் முடிவே இறுதியானது. அதை மதிக்க வேண்டும்
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
Improvisation>Intrusion https://t.co/e72P9oAqNI