பொள்ளாச்சி பெண்களை கேள்வி கேட்டவர்களுக்கு 'தல' சொன்ன பதில்: இயக்குனர் நவீன்
- IndiaGlitz, [Wednesday,August 07 2019]
தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்ட பெண்ணாக இருந்தாலும் 'நோ' என்றால் நோ' தான் என்பதை அஜித்தின் வசனங்கள் மூலம் அழுத்தந்திருத்தமாக கூறியிருப்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்
இந்த நிலையில் இந்த படம் குறித்து 'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் கூறியதாவது: 'பிங்க்' போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு 'நேர் கொண்ட பார்வை' படத்தில் தல அஜித் சொல்வதுதான் பதில். #NoMeansNo என்று கூறியுள்ளார்.
இந்த படம் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு சில அரைவேக்காட்டு விமர்சகர்கள் மட்டும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறி சிக்கலில் மாட்டி உள்ளனர். இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ள பெண்கள் குறித்த ஒரு புரிதல் வேண்டும் என்பது முக்கியமானது ஆகும்
#Pink போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு#NerkondaPaaravai படத்தில் #ThalaAjith சொல்வதுதான் பதில்#NoMeansNo pic.twitter.com/9IvPzcPIvS
— Naveen.M (@NaveenFilmmaker) August 7, 2019