த்ரிஷா, ஹன்சிகாவுக்கு வைத்த பெயரை நயன்தாராவுக்கு வைத்த இயக்குனர்.. சுவாரஸ்ய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

பிரபல இயக்குனர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தனது முந்தைய பட ஹீரோயின்கள் த்ரிஷா மற்றும் ஹன்சிகாவுக்கு வைத்த பெயரை நயன்தாராவின் கேரக்டருக்கும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

‘என்றென்றும் புன்னகை’ ’மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அகமது தற்போது ’இறைவன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’இறைவன்’ திரைப்படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பிரியா என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் அகமது இயக்கத்தில் உருவான ’என்றென்றும் புன்னகை’ திரைப்படத்தில் த்ரிஷாவின் பெயர் ப்ரியா என்றும் அதேபோல் ’மனிதன்’ திரைப்படத்தில் ஹன்சிகாவின் பெயர் பிரியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முந்தைய இரண்டு ஹீரோயின்களுக்கு வைத்த அதே பெயரை சென்டிமென்ட் ஆக நயன்தாராவுக்கும் இயக்குனர் அகமது வைத்துள்ள நிலையில், மற்ற இரண்டு வருடங்கள் போலவே இந்த படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

'இறைவன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.