close
Choose your channels

'பாசமலர்' காட்சிகள் ஏன் இல்லை? 'நடிகையர் திலகம் இயக்குனர் விளக்கம்

Friday, May 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாவித்திரி என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது பாசமலர் படம்தான். சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அந்த படத்தில் போட்டு போட்டு நடித்திருப்பார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் கைவீசம்மா கைவீசு என்ற சிவாஜியின் காட்சிக்கு கண்ணில் கண்ணீர் வராத ரசிகர்களே இருக்கமாட்டார்கள். 

இந்த நிலையில் நேற்று வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் பாசமலரின் காட்சிகள் ஒருசில நொடிகளே படத்தில் இடம்பெற்றிருந்தது. அதிலும் சிவாஜி கணேசன் காட்சிகள் இல்லாதது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்த படத்தில் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாக்களே அதிகம் இடம்பெற்றுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் நாக் அஸ்வின், சிவாஜிகணேசனுக்கு இணையாக ஒரு நடிகரை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் பாசமலர் உள்ளிட்ட சிவாஜி படத்தின் காட்சிகளை தன்னால் இந்த படத்தில் இணைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் பாசமலர் இல்லாத சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமா? சிவாஜியின் மகன் பிரபு இருக்கும்போது சிவாஜி கேரக்டரில் நடிக்க நடிகர் கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment