6000 ஆண்டுகளில் நடக்கும் கதை.. கமல்ஹாசன் படம் குறித்து இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 6000 ஆண்டுகள் நடைபெறும் கதை அம்சம் கொண்டது என்று அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘நடிகையர் திலகம்’ உட்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கல்கி 2898 ஏடி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் கதை மகாபாரதத்தில் தொடங்கி 2898 இல் முடிகிறது என்றும் அதனால் தான் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை இந்த படம் பேசுகிறது என்றும் எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்று வருகிறோம் என்றும் முடிந்தவரை இந்திய பாணியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

9 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அடுத்தடுத்து விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த இளைய தளபதியா?

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இன்னொரு விஜய் பட இயக்குனரையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள பிறந்த நாள் கேக் வெட்டிய 'லெஜண்ட்' பட நடிகை.. பரிசளித்த பாடகர்..!

தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'லெஜண்ட்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய

அதுக்குள்ள 14 வருஷம் ஆச்சா? சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்த சின்ன குழந்தைகள்..!

நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகம் ஆகி 14 வருடங்கள் ஆனதை அடுத்து அவரே ஆச்சரியப்பட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'பத்து தல' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பாலிவுட் முன்னணி நடிகர் படத்தை இயக்க வாய்ப்பு..!

தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் தற்போது பாலிவுட் திரைப்படங்களை இயக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து

'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 2 நாயகிகள்? அப்ப ரம்யா கிருஷ்ணன் என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு