close
Choose your channels

இயக்குனர் மிஷ்கினுக்கு பெண் காவல்துறை அதிகாரி அளித்த கெளரவம்!

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய சட்டைப்பையில் தேசியக்கொடியை அணிவித்தது குறித்த புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்துள்ளார்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின் என்பதும் இவர் தற்போது ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பு முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் மிஷ்கின் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் இயக்குனர் மிஷ்கின் அவர்களின் சட்டைப்பையில் தேசியக் கொடியை அணிவிப்பது போன்ற காட்சி உள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவர் தனக்கு அளித்த இந்த கெளரவம் குறித்து தான் பெருமைப்படுவதாக இயக்குனர் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment