உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்.. இயக்குனர் மிஷ்கின் சொன்னது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நள்ளிரவு நடந்த அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து அந்த அணியின் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது: சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் புரிந்து கொண்டேன். மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்.
பந்திற்கும் அவரின் காலிற்கும் இடையே பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது. க்ஷண நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசைப் பிறக்கிறது. ப்ருஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்ஸி நம் மனதுகளில் விளையாடுகிறார்.
வான்காவைப் போல், நெருடாவைப் போல், பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்” என புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
இயக்குனர் மிஷ்கினின் இந்த சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
#messi#argentina#FIFAWorldCup2022 pic.twitter.com/S2ToJmj0CH
— Mysskin (@DirectorMysskin) December 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments