விஜய்சேதுபதிக்கு சாபமிட்ட இயக்குனர் மிஷ்கின் .. 'டிஎஸ்பி' டிரைலர் விழாவில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,November 26 2022]

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘டிஎஸ்பி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது என்பதும் இதில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியபோது, ‘என்னைப்போலவே விஜய் சேதுபதி சினிமாவில் நேசிப்பவர் என்றும் நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது தான் நலமாக இருப்பதாகவும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் மிஷ்கின் பேசியபோது, ‘இந்தியாவின் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் விரைவில் ஹாலிவுட்டில் நடிப்பார் என்றும் இது என் சாபம்’ என்றும் கூறினார்

மேலும் நானும் விஜய் சேதுபதியும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளோம் என்றும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.