இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில்.. தனுஷ்-விக்ரம் கலவையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் முத்தையா தனது மகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படத்திற்கு ’சுள்ளான் சேது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ‘சுள்ளான்’ என்ற படமும் விக்ரம் நடிப்பில் ’சேது’ என்ற படமும் வெளியாகி உள்ள நிலையில் தனுஷ் மற்றும் விக்ரம் படங்களின் கலவையாக இந்த படத்தின் டைட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் முத்தையா ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் வில்லனாக பரத் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கேகேஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்த படத்தை தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை உருவாக்க நடைபெற்று வருகிறது.
Unveiling the first look of #SullanSethu 🔥A Journey of a #BoyToMan💥
— Muthaiya (@dir_muthaiya) April 14, 2024
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்✨Shooting In Progress#KKRCinemasProductionNo1✨#KKRCinemas #VijayMuthaiya@Brigidasagaoffl @mynnasukumar @JenMartinmusic @Venk_editor @veeramani_art @stuntsaravanan pic.twitter.com/Z0kDiiXNl1
Unveiling the first look of #SullanSethu 🔥A Journey of a #BoyToMan💥
— Muthaiya (@dir_muthaiya) April 14, 2024
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்✨Shooting In Progress#KKRCinemasProductionNo1✨#KKRCinemas #VijayMuthaiya@Brigidasagaoffl @mynnasukumar @JenMartinmusic @Venk_editor @veeramani_art @stuntsaravanan pic.twitter.com/UPDVcs9tiu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com