இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார். கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சட்டக்கல்லூரி மாணவராக கவுதம் கார்த்திக் நடித்த இந்த படமும் இயக்குனரின் முந்தைய படங்கள் போன்று மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்து கதையாக உருவாகியுள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையும், சக்தி சரவணன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.