'பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியின் நடிப்பு.. அண்ணன் மோகன்ராஜா என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து அவரது சகோதரரும் இயக்குனருமான மோகன் ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இந்த படத்தில் உள்ள கேரக்டர்களுக்கு மிகச்சரியான நடிகர்களை தேர்வு செய்த மணிரத்னம் தான் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
குறிப்பாக பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி அந்த கேரக்டரை அப்படியே நம் மனதில் பதிய வைத்துள்ளது இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். ராஜராஜசோழன் என்றால் உடனே நமக்கு சிவாஜி கணேசன் நடித்த நடிப்பு தான் ஞாபகம் வரும். அதனை அடுத்து இந்த கால தலைமுறைகளுக்கு பொன்னியின் செல்வன் என்றால் உடனே ஜெயம்ரவி ஞாபகம் வரும் அளவிற்கு மணிரத்னம் ஜெயம்ரவியை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி ’பொன்னியின் செல்வனாகவே இந்த படத்தில் வாழ்ந்து உள்ளார் என்பதும் அவரது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது சகோதரர் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்கு இயக்குனர் மோகன் ராஜா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தம்பி நடிப்பிற்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும் அவரது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
Overwhelmed with the appreciations pouring for my brother
— Mohan Raja (@jayam_mohanraja) October 1, 2022
Means a lottttt to him and us
A biggggg thanks #ArunmozhiVarman #PonniyanSelvan1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com