லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்க: 'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட் டுவிட்டுக்கு இயக்குனரின் கமெண்ட்!
- IndiaGlitz, [Thursday,August 19 2021]
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து இன்று காலை செல்வராகவன் டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதும் ரூ.18 கோடியில் மட்டுமே தயாரான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 32 கோடி என்றும் செய்தியை பரப்பினோம் என்றும் படத்தின் பட்ஜெட்டை மிகைப்படுத்தி கூற வேண்டும் என்பதற்காக அவ்வாறு பொய் கூறினோம் என்றும் செல்வராகவன் கூறியிருந்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி பட்ஜெட் என்று வேண்டுமென்றே விளம்பரத்திற்காக மிகைப்படுத்தி கூறி வருகின்றனர் என்பதற்கு செல்வராகவனின் இந்த டுவிட் ஒன்றே சான்று என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ பட்ஜெட் குறித்த ட்விட்டிற்கு ’திரெளபதி’ பட இயக்குனர் மோகன் ஜி கூறியிருப்பதாவது: பெரிய பட்ஜெட்ல பணம் பண்றேன்.. பெரிய வசூல் மழை.. 100 கோடி.. 200 கோடி.. 500 கோடி இதெல்லாம் சொன்னா தான் தரமான சினிமான்னு நம்ப வச்சிட்டாங்க சார்.. லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்கன்னு எண்ணம் இங்க.. திரைப்பட தயாரிப்பு முறை மாற வேண்டும்.. சில கோடிகள் செலவு போதும் வெற்றி பெற..’ என்று பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜியின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெரிய பட்ஜெட்ல பணம் பண்றேன்.. பெரிய வசூல் மழை.. 100 கோடி.. 200 கோடி.. 500 கோடி இதெல்லாம் சொன்னா தான் தரமான சினிமான்னு நம்ப வச்சிட்டாங்க சார்.. லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்கன்னு எண்ணம் இங்க.. திரைப்பட தயாரிப்பு முறை மாற வேண்டும்.. சில கோடிகள் செலவு போதும் வெற்றி பெற.. https://t.co/7h6oJSbuTU
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 19, 2021