கண்ட கண்ட படத்தை எடுப்பதற்கு பதில் இந்த படத்தின் 2ஆம் பாகம் எடுங்கள்.. இயக்குனர் மோகன் ஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
கண்ட கண்ட கதை எல்லாம் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெற்ற முதல் பாகங்களின் இரண்டாம் பாக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் ஆனால் பெரும்பாலும் இரண்டாம் பாகங்கள் முதல் பாகம் போல் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
’வேலையில்லா பட்டதாரி 2’ ’சாமி 2’ முதல் ’சந்திரமுகி 2’ வரையிலான படங்கள் முதல் பாகங்கள் போல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2’ திரைப்படம் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்று கூறப்படும் நிலையில் இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:
கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு பலர் கமெண்ட்களாக ’திரௌபதி 2’ எப்போது எடுக்க போகிறீர்கள்?‘பழைய வண்ணாரப்பேட்டை 2’ எப்போது எடுக்க போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. pic.twitter.com/D6bPQLwt8v
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com