ஊழலை ஒழிப்பேன்னு சினிமாக்காரங்க சொன்னா நம்பாதிங்க: தமிழ் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலகினர் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் தரும் முதல் வாக்குறுதி 'ஊழலை ஒழிப்பேன்' என்பதுதான். சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல் அனைவரும் தரும் இந்த வாக்குறுதியை நேற்று நடந்த 'சர்கார்' விழாவில் விஜய்யும் கொடுத்தார். தான் ஒருவேளை அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனால் ஊழலை ஒழிக்க முயற்சிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தனது சமூக வலைத்தளத்தில், 'ஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சினிமாவை சார்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க.. நான் உட்பட.. லஞ்சம் கொடுத்து ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது இங்க.. அரசாங்கமும் அதிக வரி சினிமாவிற்கு விதிப்பதால் இந்த ஊழலை தெரிந்தே செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு' என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மோகனின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறத்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments