இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

இயக்குனர் மோகன் ஜி தமிழக காவல்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார், இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ’பகாசுரன்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி, சமீபத்தில் அளித்த பேட்டியில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்திருப்பதாக மோகன் ஜி பேட்டி அளித்திருந்த நிலையில், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை காசிமேடு இல்லத்தில் மோகன் ஜியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் மோகன்ஜியை திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இன்று காலை மோகன் ஜியை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சத்தம் போடாம கத்து.. விஷ்ணுவர்தனின் 'நேசிப்பாயா' டீசர் ரிலீஸ்..

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான 'நேசிப்பாயா' என்ற படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரா? 'குக் வித் கோமாளி' சீசன் 5ல் கலக்கியவர்..!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அடடே என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி படத்தின் இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகி,

தனுஷின் 'இட்லி கடை': நித்யா மேனன், அசோக் செல்வன், அருண் விஜய் கேரக்டர்கள் என்ன?

தனுஷ் நடித்தும் இயக்கியும் வரும் 'இட்லி கடை' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நித்யா மேனன், அருண் விஜய், மற்றும் அசோக் செல்வன்

மது அருந்த கூடாது உள்பட சில நிபந்தனைகள்.. தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த்..!

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில்