மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோ.. லண்டனில் படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

லண்டன் படப்பிடிப்பின் போது ராதிகா மற்றும் மாதவன் எடுத்த புகைப்படம் ராதிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி.. டைட்டில் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தி

விஜய்சேதுபதியின் அடுத்த படம் தயார்.. ரிலீஸ் எப்போது?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக

மணிகண்டனின் அடுத்த படம்.. சூப்பர் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.  

இந்த வாரம் ஓடிடியில் 2 தமிழ் படங்கள்.. அதில் ஒன்று சூப்பர் படம்..!

 ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது போலவே ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் படமா? இணையத்தில் வைரலாகும் தகவல் சாத்தியமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அஜித்தின் 64வது படமாக இந்த படம் உருவாகும் என்றும் இணையத்தில் ஒரு செய்தி பரவி வரும் நிலையில்