ரீரிலீசுக்கு கிடைத்த வரவேற்பு.. தியேட்டரில் கண்கலங்கிய தனுஷ் பட இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களாகவே ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் சென்னை கமலா திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது என்பதும் புதிய திரைப்படத்திற்கு வரும் கூட்டத்திற்கு இணையாக இந்த படங்களுக்கும் ரசிகர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய இந்த படத்தை தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்னை கமலா திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பாடல் காட்சியின் போது எழுந்து நின்று ஆட்டம் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்க்க மித்ரன் ஜவஹர் தியேட்டருக்கு சென்று இருந்தபோது ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து கண்கலங்கினார். குறிப்பாக அவரை சிலர் அடையாளம் கண்டு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பா? என்று அவர் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் இது குறித்த வீடியோவை மித்ரன் ஜவஹர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thank you for all your love ❤️❤️ #YaaradiNeeMohiniRerelease @dhanushkraja sir #raghuvaran sir #nayanthara mam @thisisysr bro 🧡❤️ @kamala_cinemas pic.twitter.com/WzBrTkaxj4
— Mithran R Jawahar (@MithranRJawahar) March 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com