சேஷாத்ரி பள்ளியில் உயிரிழந்த இயக்குனரின் மகன்...! மறக்கப்பட்ட சோக நிகழ்வு....!அதிகாரம் குறித்த அலசல்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு நாட்களாக சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தான் வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் உலாவி வருகிறது. ஆசிரியான ராஜகோபாலன், தனது இச்சைக்காக மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, ஆபாச சேட்டைகள் செய்வது உள்ளிட்ட பல செயல்களை செய்து வந்துள்ளான். மாணவிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தகவல்களின் பேரில் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. சின்மயி, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைகள், திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவிக்க, ஆசிரியர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொடூர எண்ணம் கொண்ட காமுகன் இப்போது புழல் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.
இன்று இத்தனை நிகழ்வுகள் நடந்தேற, 9 வருடங்களுக்கு முன்னாள் மறக்கப்பட்ட சோக கதை ஒன்று சேஷாத்ரி
பள்ளியில் நடந்தேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் அடுத்துள்ள, ஆழ்வார் திருநகர் காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் இயக்குனர் மனோகர். மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியும், மிருதன், கைதி, டெடி மற்றும் கள்ளழகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மகள் சினேகா, மகன் ரஞ்சனும் சேஷாத்ரி பள்ளியில் சென்ற 2012-ஆம் ஆண்டு படித்துள்ளனர். ஆக்டோபர்-16-ஆம் தேதி இவரது மகன் பள்ளியில் காலையில் செய்த, நீச்சல் பயிற்சியின் போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்தபோது 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி பெற்றதாகவும், நீச்சல் பயிற்சியாளர்கள் டீ குடிக்க வெளியில் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகன் இறந்த செய்தியறிந்த பெற்றோர்கள், மருத்துவமனைக்கு சென்று ரஞ்சனின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். நீச்சல் பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் இல்லாததே தன் மகன் உயிரிழப்பிற்கு காரணம் என மனோகர் குற்றம் சாட்டி, கே.கே நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து ராஜசேகர், அருண்குமார், ரவி, உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்காரெட்டி உள்ளிட்டோர் மீது, கவனக்குறைவாக இருத்தல் (304 ஏ) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் அப்போது பள்ளி நிர்வாகியாக இருந்த ஒய்ஜிபி மீதோ, முதல்வர் இந்திரா மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பள்ளி விவகாரத்தில் ஜெயலலிதா தலையிட்டு, சேஷாத்ரி பள்ளியை காப்பற்றியதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
நீச்சல் பயிற்சி:
நீச்சல் குளத்தில் 26 மாணவர்கள் பயிற்சி செய்யும் போது, கவச உடை அணியாமல் இருந்துள்ளனர். பயிற்சிக்கு முன்பு மாணவர்களின் உடலை பயிற்சியாளர்கள் சோதித்ததாக தெரியவில்லை. எதிர்திசையில் மாணவர்களை தூக்கிவிடவும் பயிற்சியாளர் இல்லை. பயிற்சியாளரின் கவனக்குறைவால் தான் மாணவன் மூச்சுத்திணறி இறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பள்ளி நிர்வாகமோ, மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, பொத்தாம் பொதுவாக கூறியது. பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் கவனமாக இருந்திருந்தால், மாணவனின் இறப்பை தடுத்திருக்கலாம் என புலன் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இவர்கள் மீது கவனக்குறைவு தொடர்பான பிரிவில் தான் வழக்குப்போடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒய்ஜிபி குழுமத்தை கொலை வழக்கின் கீழ் கூண்டோடு கைது செய்யவேண்டும் என்று ஆத்திரத்துடன் கூறியிருந்தனர்.
நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் தான் திருமதி ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி. இவரது கணவர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மறைவிற்குப்பிறகு இவர் தான் இப்பள்ளியை நடத்தி வருகிறார். பெரும்பாலும் விஐபி-க்களின் குழந்தைகள், திரையுலக பிரபலங்களின் குழந்தைகள் மற்றும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு படித்து வருகிறார்கள். அண்மையில் சேஷாத்ரி பள்ளியின் பழைய விளம்பரம் ஒன்று வைரலாகி வருவதை பலரும் பார்த்திருப்போம். பள்ளியின் நோக்கம், அதிலிருந்தே பலருக்கும் புரிந்திருக்கும். இப்பள்ளியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் இருப்பது உண்மையே. குறிப்பிட்ட தேதிக்குள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்றால், பெற்றோர்கள் உட்பட குழந்தைகளையும் பள்ளி நிர்வாகம் கடுமையாக சாடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், குட்டி பத்மினி, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியோ, பெண்கள் குறித்த பிரச்சனையை மதம் ரீதியாக கொண்டு போகப்பார்க்கிறார். ராஜகோபாலன் பிரச்சனை வந்ததும், நான் பள்ளியின் டிரஸ்டி இல்லை என்று கூறி விட்டார். இந்த சமயத்தில் கூட மதத்தை தூக்கி பேசிவரும் மதுவந்தியை, "ஆசிரியர் பண்ண தப்ப கேட்கிறதா விட்டுட்டு இங்கே வந்து உட்கார்ந்து பள்ளி நிறுவனங்களை தாக்கி பேசுகிறார்கள் என்று சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லையா?" என்று ஒரு பெண் கேட்ட நறுக் கேள்வி ஆடியோ அண்மையில் வைரலானது.
இனியாவது சில பெற்றோர்கள், குழந்தைகளை சாதி, மதம் பாராத பள்ளிகளில் சேர்ப்பார்களா..? என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments