காலையில் பாசிட்டிவ், மாலையில் நெகட்டிவ்: மணிரத்னம் கொரோனா செய்தியால் பரபரப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள மணிரத்னம் அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென இன்று காலை மணிரத்னம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தற்போது கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் தனது வழக்கமான வேலைகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் கொரோனா பாஸிட்டிவ், மாலையில் கொரோனா நெகட்டிவ் என்ற மணிரத்னம் குறித்த கொரோனா செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

More News

ஜெயம் ரவி - நயன்தாரா படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்: ரிலீஸ் எப்போது?

'தனி ஒருவன்' படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வரும் 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

லோகேஷின் அடுத்த படத்தில் கமலும் இல்லை, ரஜினியும் இல்லை, இந்த பிரபலம் தான்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க இருக்கிறார்

சிம்புதேவன், எம்.ராஜேஷ், வெங்கட்பிரபு, பா ரஞ்சித் இணையும் படம்: டிரைலர் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான சிம்புதேவன், எம் ராஜேஷ், வெங்கட் பிரபு மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இணையும் நான்கு கதைகள் கொண்ட திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக

ஆஸ்திரேலியா அமைச்சருடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை: இதுதான் காரணம்!

உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில்

காபி வித் காதல் ; யுவனின் இசையில் வெளியான பேபி கேர்ள் ஆல்பம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான