close
Choose your channels

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

Wednesday, May 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன். அவர் இந்த படத்தை அடுத்து விதார்த் நடித்த 'குற்றமே தண்டனை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கி வரும் இன்னொரு படமான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த படம் குறித்து மணிகண்டன் தனது கருத்துக்களை பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

'காக்கா முட்டை' படம் போல 'ஆண்டவன் கட்டளை படம் இருக்காது என்றும் அதே நேரத்தில் யதார்த்தத்தை மீறாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் வழக்கமாக தமிழ் சினிமாவில் பார்க்கும் நாயகி போல இந்த படத்தின் நாயகி ரித்திகாசிங் இருக்கமாட்டார் என்று கூறிய மணிகண்டன், யோகிபாபுவுக்கு இந்த படம் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி, ரித்திகாசிங், நாசர், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு கே இசையமைத்து வருகிறார். 'ரெளத்திரம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment