ஜிவி பிரகாஷை அறிமுகம் செய்த இளம் இயக்குனர் மறைவு: அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசை அமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷை நடிகராக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த இளம் இயக்குனர் திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான திரைப்படம் ’பென்சில்’. இந்த படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்கி இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு உருவான இந்த படத்தை இயக்கிய மணி நாகராஜ், தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ’வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதாக வெளியான செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் மணிநாகராஜ் மறைவுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ஆழ்ந்த வருத்தத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Hard to believe My beloved friend director Mani Nagaraj is no more. My deepest condolences to the bereaved family and Friends. Rest in Peace my friend
— G.V.Prakash Kumar (@gvprakash) August 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com