கமல் இல்லை என்றால் 'முள்ளும் மலரும்' இல்லை. மகேந்திரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம்பிரபு நடித்த 'வாஹா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் பாடல்களை வெளியிட அதை இயக்குனர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த விழாவில் பேசிய மகேந்திரன், கமல் இல்லை என்றால் நானும் இல்லை, என்னுடைய முள்ளும் மலரும்' படமும் இல்லை' என்று கூறினார்.
தனது முதல் படமான 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை படமாக்க முயற்சி செய்தபோது தனக்கு ஒளிப்பதிவாளர் யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொண்ட கமல், தனக்கு பாலுமகேந்திராவை அறிமுகம் செய்ததாகவும் கூறினார்.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற 'செந்தாழம்பூவில்' என்ற பாடலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய ஒரு முக்கிய காட்சி எடுக்கப்பட வேண்டியது இருந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் எடுத்தவரை போதும் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் கூறியதாகவும், அதற்கு தான் உடன்படாமல் இருந்தபோது கமல் தனது சொந்த செலவில் அந்த காட்சியை எடுக்க செலவு செய்தார் என்றும் கூறினார். இதனால் கமல் இல்லை என்றால் 'முள்ளும் மலரும்' படம் முழுமையாக வந்திருக்காது என்றும் கமல் அவர்களால் எத்தனையோ திரையுலகினர் உருவாகியது போல நானும் இங்கே நிற்பதற்கும் கமல்தான் காரணம் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments