விஜய்சேதுபதி படத்தில் நீதிபதியாக நடிக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,November 18 2018]

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தினமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு நாளும் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், நீதிபதி கேரக்டரில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் அய்யா ஆதிமூலம்' என்ற கேரக்டரில் விஜய்சேதுபதியும், பரசுராமன் என்ற கேரக்டரில் இயக்குனர் மெளலியும், லட்சுமி என்ற கேரக்ட்ரில் நடிகை அர்ச்சனாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு '96' பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

More News

தயாரிப்பாளர்கள் இந்த ஆபத்தை உணர வேண்டும்: எஸ்.ஆர்.பிரபு கோரிக்கை

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளியன்றும் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி இருந்தும் ரிலீசூக்கு தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சாதிகள் போகவில்லை, ஸ்வாதிகள்தான் இல்லாமல் போகிறார்கள்: கஸ்தூரி

தமிழகத்தில் சாதி வேறுபாடு காரணமாக ஆணவக்கொலைகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இந்த கொலைகளுக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் கொடுத்த போனஸ் பாடல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தநிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.

அக்சராவின் அந்தரங்க படங்கள் லீக் விவகாரத்தில் முன்னாள் காதலரிடம் விசாரணை

நடிகை அக்சராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அக்சராஹாசன் மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

தேசிய விருது காத்திருக்கிறது: 'சர்வம் தாளமயம்' குறித்து பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.