மூன்றே ஷெட்யூல்.. 'விடாமுயற்சி' படத்திற்காக பக்கா பிளான் போட்ட மகிழ் திருமேனி..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும் தனது ஸ்டைலில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தின் ஆரம்பகட்ட பணியை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் என மூன்று ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பை முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைத்தும் சரியாக திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மனைவி மகள்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 'லியோ' ஹரால்டு தாஸ்.. க்யூட் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படத்தில் ஹரால்டு தாஸ் என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜுன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் மனைவி மகள்களுடன்

கிளிம்ஸ் ஆஃப் ஹரால்டு தாஸ் வீடியோ.. மிரட்டும் ஆக்சன் கிங் அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில்  அவர் ஹரால்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும்

நியூஜெர்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தமன்னா.. வைரல் வீடியோ

நடிகை தமன்னா நியூஜெர்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் விழியகம் அமைப்பின் முதல் கண் தானம்.. விபத்தில் உயிரிழந்த ரசிகரின் கண்கள் தானம்..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் விழியகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பின் முதல் கண்தானம் தற்போது அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. டிடியின் ஆசை..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி அடுத்த ஜென்மத்தில் பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்ய விருப்பம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.