தளபதி ரசிகர்களின் விலையில்லா விருந்தகத்திற்கு பிரபல இயக்குனர் உதவி 

  • IndiaGlitz, [Thursday,September 12 2019]

தளபதி விஜய்யின் பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் கொண்டாடப்பட்ட நிலையில் அவருடைய பிறந்தநாளை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிக்கும் வகையில் ’விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் உணவகங்களை விஜய் ரசிகர்கள் ஆங்காங்கு ஏற்பாடு செய்துள்ளார்க்ள்.

சென்னையிலும் வடசென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் விஜய் ரசிகர்களின் இந்த விலையில்லா விருந்தகம் அமைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இங்கு தினமும் காலை காலை 7.35 மணி முதல் 8.35 மணி வரை 109 பேர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் ரசிகர்களின் இந்த விலையில்லா விருந்தகத்தால் தமிழகம் முழுவதும் பலர் பயனடைந்து வருவதை அடுத்து இந்த விலையில்லா விருந்தகத்தின் ஒரு நாள் உணவு செலவை பலர் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குனர் எம்.முத்தையா மதுரையில் உள்ள தளபதி விஜய்யின் விலையில்லா விருந்தகத்திற்கு ஒருநாள் உணவுக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். எம்.முத்தையா போலவே பலரும் ஒரு நாள் உணவுச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் இந்த திட்டம் ஒரு ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிகில்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு: காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் இளமையான டைட்டில்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இன்று தர்ஷன் தினம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினமும் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே.

'தர்பார்' செகண்ட்லுக்: தரமான சம்பவம் செய்த முருகதாஸ் டீம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்பார்'

நம்பிக்கையோடு இருங்கள்: இஸ்ரோ சிவனுக்கு தமிழக சிறுமி கடிதம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.