கவலைப்பட வேண்டாம்: 'மாஸ்டர்' படம் பார்க்க ரசிகர்களுக்கு இயக்குனர் தந்த உறுதிமொழி!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பதும் ரூபாய் 250 கோடிக்கு மேல் திரையரங்கிலும் அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சரியாக 30 நாட்கள் ஆனதை அடுத்து சென்னையில் உள்ள ராக்கி திரையரங்கத்தில் இந்த படத்தை பார்க்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வந்திருந்தார். 30வது நாளில் திரையரங்கு முழுமையாக நிரம்பி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே சில வார்த்தைகள் பேசினார்.

30வது நாளில் இவ்வளவு கூட்டம் இருப்பதை பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. மேலும் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இன்று இந்த படத்தை முழுவதுமாக முழுவதுமாக உட்கார்ந்து பார்ப்பேன்’ என்று உறுதிமொழி கொடுத்தார். இதனை அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துடன் அவர் முழு படத்தையும் பார்த்துவிட்டு தான் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.