'மாஸ்டர்' இயக்குனருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் கைதி என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய பின்னர் அடுத்ததாக கமல் நடிக்க உள்ள ’விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டார் என்பதும் தேர்தல் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் தற்போது லோகேஷ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் வந்துள்ளது. இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவெனில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து நான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்கு என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். விரைவில் குணமாகி வீடு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments