10 நாள் ஆயிருச்சு நான் வேலையை ஆரம்பிச்சு: 'தளபதி 67' குறித்து லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தளபதி 67’ படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து விட்டேன் என்றும் 10 நாட்களாக திரைக்கதை எழுதி வருகிறேன் என்றும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பிலிருந்து கூறிய பின்னரே நான் மற்ற தகவல்களை கூற முடியும் என்றும் கூறினார்.

இதனையடுத்து அவர் ’தளபதி 67’ படத்துக்கான ஸ்கிரிப்ட்டை எழுத ஆரம்பித்து பத்து நாட்கள் ஆகிவிட்டன என்பது தெரிய வருகிறது

More News

கிரிக்கெட் மைதானத்தில் செம டான்ஸ் ஆடிய கஸ்தூரி: இதுதான் பிட்ச் ரிப்போர்ட்டா?

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை கஸ்தூரி செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

4 எலும்பு கிடைச்சா போதும், அதை வச்சு ஜாதகத்தையே எழுதிடுவேன்: அமலாபாலின் 'கடாவர்' டிரைலர்

நடிகை அமலாபால் நடித்த 'கடாவர்' என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர்

இந்த இயக்குனர் என் படத்தை பாராட்ட வேண்டும்: இளம் இயக்குனர் குறித்து பாரதிராஜா

இந்த இளம் இயக்குனர் என்னைப் பாராட்டும் அளவுக்கு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

விஜய்யின் 'வாரிசு' ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமா? சரத்குமார் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறிய தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட்சிங்கிள் பாடல்: பாடகர், பாடலாசிரியர் பெயர்கள் இதோ!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில்